திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 979 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தமிழகம் முழுவதும் மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, வேடசந்துார் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 10 ஆயிரத்து 656 மாணவர்கள், 11 ஆயிரத்து 703 மாணவிகள் என, மொத்தம் 22 ஆயிரத்து 359 பேர் தேர்வு எழுதுகின்றனர்.நேற்று 88 மையங்களில் நடந்த விலங்கியல், தாவரவியல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆபீஸ் மேனேஜ்மென்ட், பேசிக் மெக்கானிக்கல் தேர்வை 12 ஆயிரத்து 273 மாணவர்கள் எழுதினர். அதில் 979 பேர் ஆப்சென்ட் ஆகினர். முன்னதாக, கிருமிநாசினியை கொண்டு கைகளை கழுவிய பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டார்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||