. -->

Now Online

FLASH NEWS


Tuesday 31 March 2020

கொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா?

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் வேலைக்கு செல்ல இயலாத ரேஷன் அட்டைதாரருக்கு தமிழக அரசு ரூ 1000 நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தை பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பார்ப்போம்.




தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? வாங்க செக் செய்யலாம்!
கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பணி தவிர்த்து மற்ற பணி நிமித்தமாக யாரும் வெளியே வர முடியவில்லை.வாழ்வாதாரம்
1000 நிதியுதவி

இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ 1000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போல் ஏப்ரல் மாதம் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியன இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ 1000 நிதியுதவி யாருக்கெல்லாம் வரும் என்பதை நாம் இணையத்தில் சோதனை செய்துக் கொள்ளலாம்.





செயலி
செல்போன் எண்
உங்கள் மொபைலில் TNEPDS என்ற செயலியை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த செயலியினுள் சென்றால் செல்போன் எண்ணை கேட்கும். உங்கள் ரேஷன் கார்டில் எந்த எண் கொடுத்துள்ளீர்களோ அதை கொடுக்கவும்.





கேப்ட்சா
டைப் செய்யுங்கள்
அதன் பின்னர் கீழே இருக்கும் கேப்ட்சாவை கொடுங்கள். அப்போது பதிவு செய் என்ற பட்டனை அழுத்துங்கள். அப்போது உங்களுக்கு ஒரு ஒன்டைம் பாஸ்வேர்டு (ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) வரும். அதை கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் டைப் செய்துவிட்டு உள்நுழை என்ற பட்டனை அழுத்துங்கள்.




உரிமம்
நிவாரணம்

இதில் ஏராளமான தகவல்கள் வரும் அதில் "உரிமம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் 1000 ரூ நிதித் தொகை என கொடுத்திருப்பார்கள். அதில் உரிம அளவு எனும் இடத்தில் ஒன்று என்ற எண் (1.000) இருந்தால் உங்களுக்கு நிவாரணம் உண்டு. மீத அளவு என்ற இடத்திலும் 1 என்ற எண் இருந்தால் நீங்கள் அந்த தொகையை வாங்கவில்லை என அர்த்தம். ஜீரோ என இருந்தால் நீங்கள் அதை வாங்கிவிட்டீர்கள் என்பது அர்த்தம்.