t> கல்விச்சுடர் பிளஸ் 2 கணித தேர்வு: 5 சிக்கலான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 March 2020

பிளஸ் 2 கணித தேர்வு: 5 சிக்கலான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை

பிளஸ் 2 கணித தேர்வில், ஐந்து கேள்விகள் மிகவும் சிக்கலாக இருந்ததால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு, மொழி பாட தேர்வுக்கான வினாத்தாள் மட்டுமே, எளிமையாக இருந்தது. மற்ற அனைத்து பாடங்களுக்கும், கடினமான கேள்விகள் இருந்தன. அதனால், இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் பெருமளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கணித தேர்வில், ஐந்து கேள்விகள் மாணவர்களை குழப்பும் விதத்தில் இருந்ததால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

வினாத்தாள் வகை, 'ஏ,பி' யில், 9 மற்றும் 4ம் வினாவிற்கான குறிப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான குறிப்புகள் இருந்தன. அதனால், அதை எழுத முயற்சித்தோருக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும், 11, 15, 16 மற்றும், 38ல் இடம் பெற்ற கேள்விகள், மாணவர்களை குழப்புவதாக இருந்தது. அவற்றுக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சித்து இருந்தால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL