t> கல்விச்சுடர் திட்டமிட்டபடி, பிளஸ் 2 தேர்வு இன்று நடைபெறுகிறது! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 March 2020

திட்டமிட்டபடி, பிளஸ் 2 தேர்வு இன்று நடைபெறுகிறது!

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகள் குறித்து, புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. திட்டமிட்டபடி, பிளஸ் 2 தேர்வு இன்று நடக்கிறது.
தமிழகத்தில் நடந்து வரும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தள்ளி வைக்கப்படலாம்' என, தகவல்கள் பரவின. 

நேற்றிரவு, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பிலும், தேர்வுகள் தள்ளி வைப்பு குறித்து, எந்த தகவலும் இடம் பெறவில்லை. 10ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 27ம் தேதி துவங்கும் நிலையில், அதுகுறித்தும், மாற்று அறிவிப்பு வெளியாகவில்லை.


பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன.

 இந்த தேர்வுடன் தொழிற்கல்வி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கான தேர்வுகள் முடிகின்றன.மார்ச் 24ம் தேதி, வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியலுக்கான தேர்வுகள் நடக்கின்றன. அத்துடன், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.

JOIN KALVICHUDAR CHANNEL