t> கல்விச்சுடர் மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவையை நாடு முழுவதும் ரத்து செய்தது இந்தியன் ரயில்வே - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 March 2020

மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவையை நாடு முழுவதும் ரத்து செய்தது இந்தியன் ரயில்வே




கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும் மார்ச் 31 வரை  ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும்  கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 332 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
 கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள், சிறப்பு ரயில்கள் என அனைத்து பயணிகள் ரயில்களும் மார்ச் 31 வரை ரத்து செய்யப்படுவதாகவும், சரக்கு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முன்னதாக, இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

JOIN KALVICHUDAR CHANNEL