t> கல்விச்சுடர் தமிழ் வழியில் கல்வி கற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை 50% விழுக்காடாக உயர்த்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 March 2020

தமிழ் வழியில் கல்வி கற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை 50% விழுக்காடாக உயர்த்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை


பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் கல்வி கற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வரவேற்கின்றோம் அதேநேரத்தில் 20% விழுக்காடு இருந்து 50% விழுக்காடாக உயர்த்த வேண்டும்


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கின்றேன்
===========
தமிழ்வழியில் கல்வி கற்பவர்களுக்கு 2010ம் ஆண்டு அப்போதைய அரசு கொண்டு வந்து நடைமுறையில் இருந்து வருகிறது,

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் தொடர்ந்து பட்டப்படிப்பு வரை தமிழ்வழில் பயின்று இருந்தால் மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தகுதிற்கான வேலைவாய்ப்பில் ஒன்று வகுப்பு முதல் தொடர்ந்து பயின்றிருக்க வேண்டும் என்றும் சட்டசபையில் மாண்புமிகு பணியாளர்கள் நிர்வாக சீர்த்திருத்த துறை அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது ஏன் என்றால் தமிழ் வழிக்கல்வியில் அதிக அளவில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர் , இந்த சூழ்நிலையில் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை அமைச்சர் அறிவித்திருப்பது  ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் நிகழ்வாகும். ஏற்கனவே இருக்கும் 20% என்பதை 50% விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே தேர்ச்சிபெற 35 மதிப்பெண் என்று இருந்ததை 45 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அறிவிப்பை மறுபரிசீலனை செய்து ஏற்கனவே இருப்பது போல தேர்ச்சி பெற 35 மதிப்பெண் எடுத்தால் போதுமானது என மாற்றி அமைத்தால்   ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள், அதே நேரத்தில் 

மேலும் அரசு ஊழியர்கள் மேற்படிப்பு படிக்க வழங்கி வந்த ஊக்க ஊதியத்தை  10.03.2020 அன்று முதல் ரத்து செய்து உத்தரவு இட்டது, இதில் பெரும்பாலம் ஏழ்மைநிலையில் இருந்து கடைநிலை ஊழியர்களாக அதாவது அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர், ஓட்டுநர்,துப்புறவு பணியாளர்களாக பணியில் சேருகின்றனர் தமிழ்நாடு தேர்வாரியத்தின் மூலம் இளநிலை உதவியாளர்களாக தேர்வாகி பின்பு மேற்படிப்பிற்கு படிக்க தொடர அவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து கல்வி பாதியிலயே நின்று விடக்கூடாது என்பதற்காக  தமிழக அரசு 1977 ம் ஆண்டு டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு இந்த உத்தரவை பிறப்பித்தது, தொடர்ந்து பல்வேறு மேற்படிப்பு தொடர 1978, 1983,1984,1985  ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு மேற்படிப்டிப்பிறகு ஊக்க ஊதிய வழங்க அந்தந்த துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்தது  தொடர்ந்து இந்த உத்தரவு தொடர்ந்து வந்த நிலையில் 10.03.2020 பின்னர் மேற்படிப்பு பயிலும் அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்வதாக அரசு உத்தரவு பிறப்பித்தது, இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும்
கடைநிலை ஊழியர்களின் நலன் கருதி மேற்படிப்பிற்கு ஊக்க ஊதிய பெற ஆணை பிறப்பிற்க வேண்டும் என்று  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

JOIN KALVICHUDAR CHANNEL