சென்னை, தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கையில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா (அ.தி.மு.க.) கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர், “புதிய கல்விக்கொள்கையின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘கியூஆர் கோர்டு‘ பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆனால் அந்தபயிற்சியை தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று தனியார் பள்ளி ஆசிரியர்களும் கோரியுள்ளனர்.
இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.அதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கான இந்த கோரிக்கையை பற்றி அரசு பரிசீலித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||