. -->

Now Online

FLASH NEWS


Monday 30 March 2020

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று அரசு அறிவித்துள்ளதால் அதற்கான தேர்ச்சி பட்டியலை தயாரிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்கும் வகையில் பள்ளிகளுக்கு முதல்கட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர். தற்போது ஏப்ரல் 14ம் தேதி வரை தேசிய அளவிலான 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. தேர்வுகளும் பிளஸ்2வுக்கு மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிளஸ்1 மாணவர்களுக்கு ஒரு தேர்வும், 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஒரு பாடத்துக்கு கூட தேர்வு நடத்தப்படவில்லை. 

தற்போது 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பின்பற்றவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, அனைத்து வகை பள்ளிகளிலும் 9ம் வகுப்பு வரை தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வகுப்பு மாணவர்கள் இக்கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அவர்களுடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம் மற்றும் தொலைபேசி வழியாக தெரிவிக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு, தொடர் நடவடிக்கைகள் எடுப்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதை தொடர்ந்து இந்த விவரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.