. -->

Now Online

FLASH NEWS


Wednesday 18 March 2020

பாதிப்பு அறிகுறி இருந்தால் இடது கையில் முத்திரை




மகாராஷ்டிராவில் கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பவர்களின் இடது கையில் முத்திரை குத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து மும்பை திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என மாநகராட்சியின் சுகாதாரத்துறை குழுவினர் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வின்போது கொரோனா அறிகுறிகளுடன் யாராவது கண்டறியப்பட்டால் அவர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்படுகின்றனர். ‘‘வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்’’ என்றும் எத்தனை நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுவார் என்ற தேதியுடன் குறிப்பிட்டு அந்த நபரின் இடது கையில் முத்திரை குத்தப்படுகிறது.

அத்துடன் ‘‘மும்பையை பாதுகாப்பதில் பெருமை கொள்கிறேன்’’ என்ற வாக்கியமும் இடம்பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களும் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கும்பட்சத்தில் அவர்களது இடது கைகளிலும் இதே முத்திரை குத்தப்பட்டு வருகிறது. மும்பையைப் போலவே மகாராஷ்டிராவின் இதர நகரங்களில் இந்த நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

என்னாது கொரோனாவா? தலைமை நீதிபதியை அலற விட்ட வக்கீல்:கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்துக்கு வருபவர்கள் பரிசோதனைக்குப் பிறகே நேற்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர். உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா அமர்வில் நேற்று நடந்த விசாரணையில் வக்கீல் ஒருவர் முகக்கவசம் அணிந்தபடி வாதம் செய்தார். அப்போது அவர், ‘‘எனது கட்சிக்காரர் சில நாட்களுக்கு முன் என்னை சந்தித்து பேசினார். பின்னர், அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதியானது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், என்னையும் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன் காரணமாக, முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து வந்துள்ளேன்,’’ என்றார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை நீதிபதி, ‘‘இந்த நிலைமையில் நீங்கள் ஏன் நீதிமன்றத்திற்கு வந்தீர்கள்? முதலில் நீங்கள் வெளியே செல்லுங்கள், உங்கள் ஜூனியரை வரச் சொல்லுங்கள்,’’ என்று உத்தரவிட்டார். உடனே, வக்கீல் வெளியே சென்றார். பிறகு அவருடைய ஜூனியர் வக்கீ–்ல் வந்தார். அவரிடம் தலைமை நீதிபதி, ‘‘உங்கள் சீனியரை முதலில் கொரோனா தனிமை வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள். நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள். உடனே சென்று மருத்துவ பரிேசாதனை செய்து கொள்ளுங்கள்,’’ என்று உத்தரவிட்டார்.

சீனியர் வக்கீலின் இந்த செயலால், நீதிமன்–்றத்தில் இருந்த மற்ற நீதிபதிகளும், வக்கீல்கள், பொதுமக்களும் கூட பீதி அடைந்தனர்.வாதி, பிரதிவாதிகள், சாட்சிகள் வர தடை:தலைமை நீதிபதி மேலும், ‘‘அவசியம் இல்லாமல் வழக்கில் சம்பந்தப்பட்ட வாதிகளும், பிரதிவாதிகளும் மற்றும் சாட்சிகளும் நீதிமன்றத்துக்கு வந்து காத்திருக்க வேண்டாம்.

அவர்கள் தங்கள் வக்கீலுடன் ஆலோசித்து வழக்குக்கு அவசியம் என்றால் மட்டுமே வந்தால் போதும்,’’ என்றும் உத்தரவிட்டார். ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் வெளியேற அறிவுறுத்தல்:டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கடந்த டிசம்பர் 15ம் தேதி தொடங்கி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் இதுவரை கொரோனா வைரஸ் காய்ச்சலினால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, மதவிழா, குடும்ப விழா, சமூகம், அரசியல் மற்றும் கலாச்சார விழா என எந்த விழாவாக இருந்தாலும் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஷாகீன் பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் அங்கிருந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.