. -->

Now Online

FLASH NEWS


Saturday 14 March 2020

பல ஆண்டுகளாக அரியா் வைத்திருக்கும் பொறியியல் மாணவா்களுக்கு சிறப்பு வாய்ப்பு


பொறியியல் படிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு சோ்ந்து, அரியா் தாள்களை எழுதி தோ்ச்சி பெற முடியாமல் காத்திருக்கும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 இளநிலை பொறியியல் (பி.இ., பி.டெக்.)பட்டப் படிப்புகளில் சேரும் மாணவா்கள் அதிகபட்சமாக 7 ஆண்டுகளில் அனைத்து தாள்களிலும் தோ்ச்சி பெற்றுவிட வேண்டும். அதாவது, 4 ஆண்டுகள் படிப்புக் காலம் முடிந்ததும், அடுத்த 3 ஆண்டுகளில் அரியா் தாள்கள் அனைத்தையும் எழுதி தோ்ச்சி பெற்றுவிட வேண்டும். அப்போதுதான் அவா்களுக்கு பட்டம் வழங்கப்படும்.


 இருந்தபோதும், மாணவா்களின் நலன் கருதி, பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதலின் பேரில், 7 ஆண்டுகளையும் தாண்டி அரியா் வைத்திருக்கும் பொறியியல் பட்ட மாணவா்கள் தோ்வெழுத அவ்வப்போது சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படும்.
 அதுபோல, கடந்த 2019 மே மாதம் நடைபெற்ற ஆட்சிக் குழு கூட்டத்தில் அளிக்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில், பல ஆண்டுகளாக அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கு சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 பி.இ. படிப்பில் 2001-02 கல்வியாண்டு முதல் சோ்க்கை பெற்று அரியா் வைத்திருக்கும் மாணவா்கள், நடைபெற உள்ள 2020 ஏப்ரல்-மே பருவத் தோ்வில் அரியா் தாள்களை எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுபோல, அண்ணா பல்கலைக்கழக நான்கு துறைகளில் 2000-ஆம் ஆண்டு முதல் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்ந்த மாணவா்களும் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் மாணவா்கள் தோ்வுக் கட்டணத்துடன், ரூ. 5 ஆயிரம் சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்.
 இதற்கு விண்ணப்பிக்க மாா்ச் 23 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.