. -->

Now Online

FLASH NEWS


Wednesday 25 March 2020

சேவையை நிறுத்திக்கொண்ட அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள்!

வாடிக்கையாளர்கள் முன்னர் செய்த ஆர்டர்களை ரத்து செய்யலாம். அதற்கான பணம் வாடிக்கையாளர்களின் திருப்பி அளிக்கப்படும்.

அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன.

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்கள் புதிதாக ஆன்லைன் ஆர்டர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இந்தியாவில் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக அமேசான் தளத்தில் ஆர்டர் செய்திருந்தால் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் டெலிவரி செய்வதாகவும் இதர பொருட்கள் நிலை சரியான பின்னரே டெலிவரி செய்யப்படும் என்றும் அமேசான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கூடுதலாக, வாடிக்கையாளர்கள் முன்னர் செய்த ஆர்டர்களை ரத்து செய்யலாம் என்றும் அதற்கான பணம் குறிப்பிட்ட காலத்துக்குள் வாடிக்கையாளர்களின் திருப்பி அளிக்கப்படும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. இதற்காக எவ்விதக் கட்டணப் பிடித்தமும் இல்லை.

இதேபோல், ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் வாடிக்கையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை ஆர்டர் செய்திருந்தால் மட்டும் டெலிவரி தருவதாகத் தெரிவித்துள்ளது.