. -->

Now Online

FLASH NEWS


Sunday 22 March 2020

அன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... - பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக ஒரு மடல்



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு👇

கொரோனோ எனும் பெரிய அரக்கனை எதிர்கொண்டு அதிலிருந்து மனித சமூகத்தை வெளி கொண்டு வருவது நம் அனைவரின் வேண்டுதலும் பொறுப்புணர்வும் .

வரும் 27ம் தேதி பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கடந்த ஒரு வருடமாக உழைப்பை நாம் வழங்கி வந்தோம்.

தற்போது பேரவையில் தமிழக முதல்வர் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு என்ற தகவலை வழங்கியுள்ளார்.

மேலும்  சூழ்நிலையை பொறுத்து ஏப்ரல் 15 முதல்  தேர்வை துவங்கலாம் என ஆலோசித்து வருகின்றனர்.

அது கோரோனா பரவலை பொறுத்து மாறுபடும்.

எனவே கூடுதலாய் 25 நாட்கள் நமக்கு தேர்விற்கு தயாராக வாய்ப்பு கிடைத்துள்ளது.

விடுமுறை தினங்களை திருப்புதலுக்காக பயன்படுத்துங்கள்.

ஆலோசனை பெற ஆசிரியர்களுக்கு போன் செய்யுங்கள்.

இந்த 25 நாட்கள் இடைவிடுத்து _ நேரடியாக தேர்விற்கு செல்லுதல் நிச்சயம்  உங்களது ஒரு வருட உழைப்பின் பலனை முழுமையாக தராமல் போகலாம்.

எனவே தினமும் அட்டவணையிட்டு படிக்க முற்படுங்கள்.

காலை 6- 8 கணிதம்
காலை 9- 11 ஆங்கிலம்
மதியம் 11- 1 அறிவியல்
மாலை 4 - 6 தமிழ்
மாலை 6 - 8 ச.அறிவியல்

என இயன்றவரை காலத்தை உபயோகமாய் பயன்படுத்துங்கள்.

உடனிருந்து வழிநடத்த சூழல் இல்லாததால் - நீங்களே ஆசிரியர் நீங்களே மாணவர்.

உங்களது எதிர்கால வளர்ச்சிக்காக முயற்சிகளை பயிற்சிகளை முன்னெடுங்கள்.

தேர்வு குறித்த அடுத்த கட்ட அறிவிப்புகள் தொலைகாட்சி  செய்திகள் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்

* அதிகம் நீர் அருந்துங்கள்
* பழம் , காய்கறிகள் கூடுதலாய் சேர்த்து கொள்ளுங்கள்.
* 6 முறையாவது கைகளை கழுவுங்கள்.
* இயன்றவரை வெளிவருவதை ஒன்று கூடுவதை தவிருங்கள்

கொரோனாவை கொள்வோம்.உடன் பொது தேர்விலும் வெல்வோம்.

வாழ்த்துகள்.