. -->

Now Online

FLASH NEWS


Friday 20 March 2020

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் -தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்



கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் 50% விழுக்காடு மட்டுமே அலுவலகத்திற்கு வருகை தந்தால் போதும் என்றும் கல்லூரி தேர்வுகள ரத்து அறித்திருக்கிறது மற்ற மாநில அரசுகளும் அறிவித்தை போன்று தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
===========
உலகமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது உலக முழுவதும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர் இந்தியாவிலும் கொரோனா வைரசால் இதுவரை நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர் 175 கும் பாதிப்படைந்துள்ளனர்

இந்த சூழ்நிலையில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அயல்நாட்டு விமான சேவைகள் 22ந்தேதி முதல் 31 வரை ரத்து, அண்டை மாநிலங்களுக்கு செல்லும் ரயில் ரத்து 10 வயது குழந்தைகள் 60. வயது மேற்பட்ட முதிவர்கள் வருகின்ற 31ந்தேதி வரை வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று அபிவிருத்தி உள்ளது அதே போன்று இந்த பிரதமர் அவர்களும் 22ந்தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியல் வரக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார், அதேபோன்று மத்திய அரசு ரயில் பேருந்துகளில் கூட்டத்தை தவிற்கும் விதமாக பள்ளிகளில் கல்லூரிகளில் நெருக்கமாக அமரும் சூழ்நிலை இருப்பதாலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது அதே போன்று கல்லூரி தேர்வுகளை ரத்து செய்துள்ளது, மத்திய அரசு ஊழியர்கள் 50% விழுக்காடு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என்று அறிவுறுத்தி உள்ளது

தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கைளை எடுத்துவருகிறது,31ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது, மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான திரையரங்குகள், பெரியளவிளான ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பெரிய மால் கள், மூடவும், அரசு பொது நிகழ்ச்சிகள் , அரசியல் கட்சி மற்றும் விழாக்களுக்கு தடை வித்துள்ளது , தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூட உத்தரவு , தமிழ்நாடு தேர்வாரியத்தின் மூலம் நடக்கும் தேர்வுகள் ரத்து ,மாநில முழுவமும் கொரோனா தடுப்பு மையங்களை அமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது,

அதே சூழ்நிலையில் மத்திய அரசு பேருந்துகள் ரயில்களில் அலுவலகங்களில் இருக்கைகளில் அமர கூடிய சூழ்நிலை இருப்பதாலும் தன் குழந்தைகளை வீட்டிலிருந்தே கவனத்திக் கொள்ளும் பொருட்டும் அலுவலக பணிகளை வீட்டிலிருந்து கவனிக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு ஊழியர்கள் 50% விடுக்காடு மட்டும் பணிக்கு வந்தால் போதும் என்று அளித்துள்ளது அதனேயே பின்பற்றி தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களையும் வீட்டிலிருந்தபடியே பணிகளை மேற்கொள்ள உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு