t> கல்விச்சுடர் கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை - சீனா மறுப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 March 2020

கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை - சீனா மறுப்பு



கொரோனா வைரசை தாங்கள் உருவாக்கவில்லை என்று சீனா மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் (Ji Rong), கொரோனா வைரசை சீன வைரஸ் என்றோ  சீன வைரஸ் என்றோ கூறுவது தவறு என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வைரசை சீன உருவாக்கவோ உள்நோக்கத்துடன் பரப்பவோ இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சர்வதேச சமூகம் சீனர்களை குறைசொல்வதை விட்டுவிட்டு, வைரசை எதிர்கொள்ள எவ்வளவு துரிதமாக செயல்பட்டது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் சீனாவுக்கு இந்தியா பல வழிகளில் உதவி செய்துள்ளது என்றும், மருத்துவ உதவிகளை வழங்கியதாகவும் அதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜோ ரிங் கூறியுள்ளார்.
 

JOIN KALVICHUDAR CHANNEL