. -->

Now Online

FLASH NEWS


Friday 20 March 2020

'கொரோனா' அச்சத்தில் அலறும் ஆசிரியர்கள்


கொரோனா வைரஸ் அச்சம் நாளுக்கு நாள் பீதியை கிளப்பும் சூழ்நிலையில், தமிழகத்தில் மாணவர்களே வராத நிலையில் ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு சென்று வருவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பெரும் சவாலாக உள்ளது.

மத்திய மாநில அரசுகள் பல்வேறு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. ஆனாலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் வழக்கமான வேலைகளில் மூழ்கி, வரும் ஆபத்தை உணராத நிலை நீடிக்கிறது.மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: பணிக்கு செல்வதில் இருந்து நாங்கள் எப்போதும் பின்வாங்கியது இல்லை. அடுத்தாண்டுக்கான திட்டமிடல் என்ற பெயரில் பள்ளிகளுக்கு வரவழைக்கின்றனர். ஆனால் தினம் பள்ளிக்கு செல்லும் 90 சதவீதத்திற்கும் மேலான ஆசிரியர்களுக்கு அதுபோன்ற பணிகள் இல்லை.இதனால் 'ஆளே இல்லாத டீ கடையில் யாருக்கு டீ ஆத்துறாங்க...' என்பது போன்று சமூக வலை தளங்களில் ஆசிரியர்கள் குறித்த 'மீம்ஸ்'கள் வெளியாகின்றன.பல மணிநேரம் சும்மாவே இருந்து நேரத்தை வீணடிக்க வேண்டியுள்ளது. இதற்காக தினமும் 'ரிஸ்க்' எடுத்து பஸ்களில் பள்ளிக்கு செல்லும்போது கொரோனா பாதிப்பு பீதியிலேயே செல்ல வேண்டியுள்ளது.ஊழியர்கள் 'வீட்டிலிருந்தே வேலை' செய்யும் நிலைப்பாட்டை தனியார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. வெளியில் 'செல்வதை தவிர்க்க வேண்டும். கூட்டங்களில் செல்ல வேண்டாம்' என அரசே அறிவுறுத்துகிறது. ஆனால் நாங்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டி உள்ளது, என்றனர்.