. -->

Now Online

FLASH NEWS


Sunday 15 March 2020

உடல் எடையினை குறைக்க தினமும் இதை சாப்பிட்டால் போதும்


கொண்டைக்கடலையை நீங்கள் உண்பதால் உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கின்றது. அதைப்பற்றி இதில் காண்போம்.





1. அதிக அளவு புரதசத்து நிறைந்தது





கொண்டைக்கடலையில் புரதச்சத்து அதிகளவில் உள்ளதால் இதை தினமும் உணவாக உண்ண எடுத்துக் கொள்ளலாம். கொண்டைக்கடலையை வேக வைத்து தேங்காயில் தாளித்து தினமும் உண்டு வரலாம். 100 கொண்டைக்கடலையில் சுமாராக 19 சதவீதம் ப்ரோடீன் சத்துக்கள் நிறைந்துள்ளன.





முடி, நகம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு புரோட்டின் சத்து அவசியமாகும். உங்களுக்கு தேவையான அளவு புரோட்டினை தரும் சக்தி கொண்டைக்கடலையில் உள்ளது. தினமும் சிறிதளவு கடலை உண்டு வருவதால் உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றது.





2. நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது





இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், தினமும் உணவாக இதை எடுத்துக் கொள்ளலாம்.





உடல் எடையை குறைக்க நார்ச்சத்து நம் உடலுக்கு தேவைப்படுகின்றது. கொண்டைக்கடலை தினமும் உண்டு வருவதால் உடல் எடை குரைந்துவிடும். கடலையை தினமும் உணடவந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.





3. இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும்





இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை கொண்டைக்கடலை உண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் வரும்.





4. உடல் எடையினை குறைக்க உதவும்





உடல் எடையை குறைக்க நார்ச்சத்து உதவுகிறது. கொண்டைக்கடலையில் எடையை குறைக்க தேவையான நார்ச்சத்து உள்ளதால், இதை தினமும் ஒரு வேளை உண்டு வருவதால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.





5. புற்று நோயினை தடுக்க உதவும்





இதில் அதிகளவில் செலினியம் என்னும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.





6. முடி கொட்டுதலை தடுக்கும்





முடியின் வளர்ச்சிக்கு புரதம் தேவைப்படுகிறது. கடலையில் உடலுக்கு தேவையான புரதம், இரும்பு மற்றும் ஜிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தவிர பல விதமான சத்துக்களும் கடலையில் உள்ளது. இந்த சத்துக்கள் முடி கொட்டுதலை தவிர்த்து, கூந்தல் வளர்வதை ஊக்குவிக்க செய்கின்றது.





கொண்டைக்கடலை எலும்புகளை வலுவடைய செய்கின்றது, அதுமட்டுமில்லாமல் ஜீரண மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.