. -->

Now Online

FLASH NEWS


Tuesday 17 March 2020

கொரோனா பெயரில் தகவல் திருடும் இணையதளங்கள்: பொதுமக்கள் உஷார்!

கொரோனா வைரஸ் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா மீதான அச்சத்தால், அது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும், விழிப்பாக இருப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த மனநிலையைப் பயன்படுத்தி பல இணையதளங்கள், நம் தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சித்து வருகின்றன.'சைபர்' பாதுகாப்பு நிறுவனமான ரெக்கார்டட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம், கொரோனா பெயரில் பல 'ஸ்பேம்' மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 வெப்சைட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தகவல் திருடும் இணையதளங்கள்1. coronavirusstatus.space2. coronavirus-map.com3. blogcoronacl.canalcero.digital4. coronavirus.zone5. coronavirus-realtime.com6. coronavirus.app7. bgvfr.coronavirusaware.xyz8. coronavirusaware.xyz9. coronavirus.healthcare10. survivecoronavirus.org11. vaccine-coronavirus.com12. coronavirus.cc13. bestcoronavirusprotect.tk14. coronavirusupdate.tkஇந்த இணையதளங்கள், நமது தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த இணையதளங்களை யாரும் அணுக வேண்டாம். எங்கு தெரிந்து கொள்வது?கொரோனா வைரசை விட அது தொடர்பான வதந்திகளும் தவறான தகவல்களும் அதிவிரைவாகப் பரவுகின்றன. அவற்றில் சில உண்மைத் தகவல்கள் இருந்தாலும் வதந்திகளே அதிகம் நிறைந்துள்ளன. எனவே, நம்பத் தகுந்த, ஆதாரமுடைய தகவல்களை அறிய, உலக சுகாதார நிறுவனத்தின், இணையதளம், டிக்டாக், டுவிட்டர் பக்கங்களை அணுகலாம். அதில், கொரோனா எப்படிப் பரவுகிறது, கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எவ்வாறு, கொரோனா தொடர்பான கேள்வி பதில்கள் மற்றும் கொரோனாவின் தற்போதைய உலக நிலவரம் என, அனைத்துத் தகவல்களும் அதில் முழுவதுமாக இடம்பெற்றுள்ளன. அந்த இணையதளத்தை அணுகி முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.