t> கல்விச்சுடர் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தாக்கம்; பாதிப்பு குறித்து அறிந்துக்கொள்ள Project Baseline என்ற வெப்சைட்டை உருவாக்கியது கூகுள் நிறுவனம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 March 2020

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தாக்கம்; பாதிப்பு குறித்து அறிந்துக்கொள்ள Project Baseline என்ற வெப்சைட்டை உருவாக்கியது கூகுள் நிறுவனம்

சீனாவை முதன் முதலாக கொரோனா வைரஸ் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்து வருகிறது. இதற்கு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 107 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குணமடைந்துள்ளார்.இதற்கிடையே, கொரோனா வைரஸ் பற்றி பறிசோதனை செய்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளவும் தனி வெப்சைட்டை கூகுளின் துணை நிறுவனமான வெரிலி உருவாக்கி உள்ளது.தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் இந்த வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவோர், அமெரிக்க குடிமக்களாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். கூகுள் கணக்கு வைத்திருக்க வேண்டும். சுய விபரங்களை பகிர்ந்துகொள்வதற்கு கூகுளின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் அரசு துறைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும். பொதுசுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் கையெழுத்திட வேண்டும்.கலிபோர்னியாவில் உள்ள பயோடெக்னாலஜி நிறுவனம், கலிபோர்னியா கவர்னர் அலுவலகம், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வெப்சைட் செயல்படும். பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்கள், அருகில் உள்ள நடமாடும் பரிசோதனை நிலையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுவர். ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டால், அடுத்து வரும் சில நாட்களில் அவர்களுக்கு முடிவு தெரியப்படுத்தப்படும்.இது குறித்து வெரிலி கூறுகையில், அதிக பாதிப்பு இருப்பதால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இப்போதைக்கு வெப்சைட்டை தொடங்குகிறோம், வெப்சைட்டுக்கு 'புராஜெக்ட் பேஸ்லைன்' என பெயரிடப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு பற்றிய புள்ளி விபரங்களும் இதில் சேகரிக்கப்படுகின்றன. கலிபோர்னியாவில் இந்த வெப்சைட் செயல்படும் விதத்தைப் பொறுத்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா பாதித்துள்ளதா இல்லையா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள தனி வெப்சைட்டை கூகுள் உருவாக்கி வருகிறது' என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN KALVICHUDAR CHANNEL