புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு மொபைல் போன் மூலம் கொரோனா பரவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. இது, பிஎம்ஜே குளோபல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ள விவரம்: மருத்துவனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களின் மொபைல் போனை ஒவ்வொரு நாளும் குறைந்தப்பட்சம் இரண்டு மணி நேரம் பயன்படுத்துகின்றனர். சக மருத்துவர்களுடன் பேசும் போது, ஆய்வு பற்றிய கலந்துரையாடலின் போது, டெலிமெடிசின், நோயாளிகளை கவனித்தல் உள்ளிட்ட மருத்துவப் பணிகளின் போது மொபைலை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதை காதோடு மட்டும் வைத்து பேசினாலும், அதன் பிறகு முகம், வாய், மூக்கு ஆகியவற்றை தொடும் சூழல் ஏற்படுகிறது. இதன் மூலமாக அவர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது. அவர்களின் மூலம், மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. மருத்துவர்களின் பயன்பாட்டில் முகக்கவசம், கையுறை, கண்ணாடி ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் மொபைல் போன் உள்ளது. இதனால், மொபைல் போன் மூலம் தொற்று பரவ சாத்தியக் கூறுகள் உள்ளன. உலக சுகாதார அமைப்பு, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு உள்ளிட்டவை மொபைல் போன் பயன்பாடு குறித்த புதிய விதிகளை வெளியிட்டுள்ளன. மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டு லேசான ஈரப்பதத்துடன் கூடிய கிருமி நாசினிகளை கொண்டு அதை சுத்தம் செய்து கொள்ளும்படி மொபைல் நிறுவனங்களும் அறிவுறுத்தி உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||