t> கல்விச்சுடர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 May 2020

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  பணிபுரியும் ஆசிரியரான சதிஷ்குமாருக்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ஆசிரியர் சதிஷ்குமாரிடம் கேட்டபொழுது, நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பிரதமர் அவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், எத்தனையோ விமர்சனங்களைக் கடந்து, சமூக பொறுப்புணர்வோடு நிறைய செயல்பாடுகளைத் தாம்  செய்து வரும் வேளையில், பிரதமருடைய இந்த வாழ்த்து இன்னும் உற்சாகத்தை அளித்து சமுதாயத்திற்காக உழைக்கத் தூண்டுவதாகத் தெரிவித்தார்.

இது எப்படி சாத்தியமாயிற்று என அவரிடம் வினவும்பொழுது,
சமூக ஊடகங்களை சரியாகப் பயன்படுத்தும்பொழுது, சாமானிய மக்களும் நாட்டின் உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் எளிதில் தொடர்பு கொள்ளமுடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம் எனத் தெரிவித்த ஆசிரியர் சதிஷ்குமார், இது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வெற்றி என மேலும் குறிப்பிட்டார்.

JOIN KALVICHUDAR CHANNEL