t> கல்விச்சுடர் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை-உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 May 2020

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை-உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

புது தில்லி: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. 
 தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 மேலும், ஒரு மாநிலத்தில் மது விற்பனை செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. அதில் நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை. எனவே, மதுபானம் விற்பனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகள் அனைத்தையும் தளர்த்துவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மதுவாங்க வருவோர், ஆதார் கொண்டு வர வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அனைத்து நிபந்தனைகளயும் தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட  வேண்டுமே தவிர, நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL