. -->

Now Online

FLASH NEWS


Wednesday 13 May 2020

வீடுகளுக்கே சென்று உதவும் ஆசிரியர்கள்




கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே முடக்கிப்போட்டிருக்கிறது.இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பது தெரியவில்லை.இந்த நேரத்தில் மருத்துவப்பணியாளர்கள் காவலர்கள்,துப்பரவு பணியாளர்கள் என மக்கள் நலனுக்காக தொடர்ந்து தமது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.அதே சமயம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு,அவர்கள் குடும்பங்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்  நிவாரணப் பொருட்கள் வழங்கி பல இடங்களில் உதவி வருகிறார்கள்.அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியம்,வடுகபட்டி எனும் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கியது அப்பகுதி மக்களை நெகிழச்சியடையச்செய்துள்ளது.கிராமத்தைச்சுற்றியுள்ள மக்கள் கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வேலைக்குச் செல்லாமல்  தவித்து வந்த நேரத்தில்,வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ரெ.பாலமுருகன் அவர்களின் முயற்சியால் மற்ற அனைத்து ஆசிரியர்களும் இணைந்து தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்கு இப்பேரிடர் காலத்தில் உதவியுள்ளனர்.மற்ற ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் இருப்பதால்  அருகில் வசித்து வரும்  ஆசிரியர்கள்,திருமதி வ.மு.சுசிலா.திருமதி ஜெயந்தி திரு.சந்தனக்குமார்,திரு.அருண்பிரபு  ஆகியோர் மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தனர்.ஆசிரியர் மாணவர் உறவு வெறுமனே நான்கு சுவர்களுக்கிடையில் அமைந்த உறவு அல்ல,பள்ளிக்கு வெளியிலும் துயரம் போக்கி மாணவர்களை அரவணைக்கும் கரம் ஆசிரியர்களுடையது என்பதை இது போன்ற நிகழ்வுகள் உணர்த்தி வருகின்றன.மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற செய்திகளும் அதே சமயம் மாணவர்களுக்கு உதவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்ற செய்திகளும்  ஏதோ ஒன்றை ஓசையின்றி உணர்த்தி வருகின்றன.

சரவணக்குமார்.தே
பட்டதாரி ஆசிரியர்