
இந்நிலையில் ஜூன் 15ல் நடக்க உள்ள தேர்வை ஜூலைக்கு மாற்றக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. கொரோனா அதிகமாக உள்ள பகுதிகளில் எப்படி தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்த போகிறீர்கள்? கட்டுப்பாட்டு பகுதியில் எப்படி தேர்வை நடத்துவீர்கள்? வெளியிலிருந்து மாணவர்கள் எப்படி கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மையங்களுக்கு வர முடியும்? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு விரிவான விளக்கத்தை ஜூன் 11ம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.