. -->

Now Online

FLASH NEWS


Tuesday 30 June 2020

ஊதியத்திற்காக அல்லாடும் மாற்றுத்திறனாளி!

2010ல் இருந்து திருவள்ளூர் மாவட்டம்,
மீஞ்சூர் வட்டாரக் கல்வி அலுவலகத்தில்
பணியாற்றி வந்தவர் மாதவன். 3 ஆண்டுகள்
ஒரே அலுவலகத்தில் பணியாற்றியவர் என்பதால்,
இவர் மணலி பகுதிக்கு ட்ரான்ஸ்ஃபர்
செய்யப்பட்டார்.


மாற்றுத்திறனாளியான தான், அவ்வளவு
தூரம் சென்றுவர முடியாது. மனைவி உயிரிழந்த
நிலையில் 2 மகள்கள், வயதான தாயாருடன் சென்
னையில் இருக்க விரும்புவதாக அதிகாரிகளுக்கு
மனுக்கள் அனுப்பினார் மாதவன். இதையேற்று
சென்னை லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப்
பள்ளிக்கு மாறுதல் செய்தது கல்வித்துறை,

இந்நிலையில், 01-10-2018ல் மீஞ்சூர் வட்டார
கல்வி அலுவலகம் தன்னை விடுவித்தது.
31-07-2018ல்தான் கடைசியாக ஊதியம் பெற்றேன்.
இதிலிருந்து இரண்டு ஆண்டுகளாக சம்பளம்
பெறாமல் சிரமப்படுகிறேன். இறுதி ஊதியச்சான்று
இருந்தால் இதற்கு தீர்வு கிடைக்கும். ஆனால்,
மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலருக்கு இது
தொடர்பாக பலமுறை கடிதம் எழுதியும் பலனில்லை
என்று மாதவன் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

வட்டார கல்வி அலுவலர் முத்துலெட்சுமியிடம்
இதுதொடர்பாக கேட்டபோது, “மாதவனுக்கு
உதவவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கும்
உள்ளது. இங்குள்ள ஆசிரியர் சிக்கன நாணய
கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருந்தாலே
கடன் வாங்கினாலும் வாங்கா விட்டாலும்
தடையில்லா சான்று வாங்கவேண்டும். என்.ஓ.சி.
கொடுத்துவிட்டால் இறுதி ஊதியச் சான்றிதழை
பெற்றுக்கொள்ளலாம். மாதவனுக்கு ரூ.4,34,691
கடன் உள்ளது. அந்தக் கடனை அடைத்துவிட்டால்
என்.ஓ.சி. சான்று அளித்து விடுவார்கள். இதுதான்
நடைமுறை” எனத் தெளிவாக விளக்கம் அளித்தார்.

2 ஆண்டுகளாக ஊதியம் பெறாமல்
இருக்கும் பிரச்சனையை கல்வித்துறை
உயரதிகாரிகள் கருணையுடன் கவனம்செலுத்தி
தீர்க்கவேண்டும் என்கிறார்கள் மாதவனுக்காக குரல்
கொடுப்பவர்கள்.

Source: Nakkeeran