. -->

Now Online

FLASH NEWS


Saturday 11 July 2020

Google எச்சரிக்கை! உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்

கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் ஜோக்கர் என்ற மால்வேர் தற்பொழுது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. உடனே இந்த ஆப்ஸ்களை உங்கள் போனில் இருந்து நீக்கிவிடுங்கள். பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக் பாயிண்ட்டின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வழியாக ஸ்மார்ட்போன்களில் மால்வேரை செலுத்துவதன் மூலம் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றொரு மால்வேர் தாக்குதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜோக்கர் மால்வேர் என்ற மோசமான மால்வேர் மூலம் கூகிள் பிளேஸ்டோரில் உள்ள 11 ஆப்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 11 ஆப்ஸ்களையும் இந்நிறுவனம் அடையாளம் கண்டு கூகிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது.


கூகிள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் இருக்கும் தடயங்களை உறுதி செய்து தற்பொழுது பாதிக்கப்பட்ட 11 மொபைல் ஆப்ஸ்களையும் தனது கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. கூகிள் நிறுவனம் இதற்கு முன்பும் ஜோக்கர் மால்வேரால் கடந்த 2017 ஆண்டு தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அப்போதிலிருந்தே, கூகிள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மீண்டும் ஜோக்கர் மால்வேர் தன் வேலையை ஆண்ட்ராய்டு பயனர்களிடம் காட்ட துவங்கியுள்ளது. பிளே ஸ்டோரில் தற்பொழுது இந்த மால்வேர் 11 ஆப்களுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 11 ஆப்ஸ்களின் பட்டியலை கீழே உள்ளது.

உங்கள் போனில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கம் செய்யுங்கள்.

அவை - Imagecompress, contect withme, hmvoice, relax relaxation, cheery message, peason love message, recovefiles, LP locker, remind me, training memory game. ஆகியவை ஆகும்.