. -->

Now Online

FLASH NEWS


Friday 7 August 2020

செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை


செப்டம்பர் 1 முதல் நவ.14 வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க  அனுமதியளிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. செப்.1இல் இருந்து முதல் 15 நாட்களில் 10,11,12ம் வகுப்புகளை  தொடங்கவும், செப்.15க்குப் பின் 6இல் இருந்து 9ம் வகுப்புகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.  பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் சில முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அவை பின்வருமாறு..

செப்டம்பரில் இருந்து முதல் 15 நாட்களில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடங்க திட்டம்



செப்.15-க்குப் பின் 6-ல் இருந்து 9-ம் வகுப்பு வரையான வகுப்புகளை தொடங்க ஆலோசனை


மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படவில்லை

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும்


வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்தவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படும்


காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட் மாலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும்




ஒவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தல்


ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படும்



மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்