. -->

Now Online

FLASH NEWS


Saturday 17 October 2020

நீட் தேர்வு ரிசல்ட்: தமிழக அரசு பள்ளி மாணவர் முதலிடம்

    ஆடு மேய்க்கும் மகன் நீட் தேர்வில் இந்தியாவில் முதலிடம்

தமிழக அரசு பள்ளி மாணவர் முதலிடம்

      நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் தமிழக மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

    இது குறித்து கூறப்படுவதாவது: 

    கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.

    அதற்கான ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. 

    இதில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஜீவித்குமார் 720 க்கு 664 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 

     நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44 ஆக உள்ளது. 

     கடந்த ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 48.57 ஆக இருந்தது.,

     இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். 

     *இவரது தந்தை நாராயணசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்*

     ஆசிரியர்கள் மூலம் திரட்டபபட்ட நிதியின் மூலம் கடந்த ஓராண்டாக நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார்.

     நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மார்க்குகள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தையும், 

    அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளார். 

‌    மேலும் அகில இந்திய அளவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் 99.99 மார்க்குகள் எடுத்து முதலிடத்தை பிடித்துளளார்