t> கல்விச்சுடர் ஓபிஎஸ்சின் நண்பர் சேகர் ரெட்டி அதிரடி கைது - ஜன. 3 வரை சிறை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 December 2016

ஓபிஎஸ்சின் நண்பர் சேகர் ரெட்டி அதிரடி கைது - ஜன. 3 வரை சிறை

தலைமை செயலாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடக்க காரணமாகி விட்டார் சேகர் ரெட்டி.

சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெரும் சிக்கலில் சிக்கியுருக்கிறார் தலைமை செயலாளர்.


காலை 5 மணி முதல் தொடர்ந்து ரெய்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயும் இணைத்து கொண்டது

கருப்பு பண ஒழிப்பின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிரடிகள் மேற்கொள்ளபட்டாலும் மேலும் பல அரசியல் பகீர் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளன.


இந்த நிலையில் சேகர் ரெட்டி மற்றும் அவரது இரண்டு நண்பர்களையும் சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது

சென்னையில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி வரும் ஜன 3ஆம் வரை சிறையில் அடைக்கப்பட்டு சிபிஐ விசாரணை வளையத்துக்கு உட்படுத்தப்படுவார்.


அவருடன் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி ஆகியோரும் மோசடி செய்தல், கூட்டு சதி ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேகர் ரெட்டியின் இந்த அதிரடி கைதால் அவரது தொடர்பில் இருந்த அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் ஆடிப்போயுள்ளனர்.

காலை முதலே மத்திய அரசின் சோதனைக்கு ஆளாகியுள்ள ராம் மோகன ராவும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.




JOIN KALVICHUDAR CHANNEL