t> கல்விச்சுடர் கறிவேப்பிலை ஜூஸா? அடேங்கப்பா ! குடிச்சா இவ்வளவும் நடக்குமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 December 2016

கறிவேப்பிலை ஜூஸா? அடேங்கப்பா ! குடிச்சா இவ்வளவும் நடக்குமா?





தென்னிந்திய  சமையலில் கறிவேப்பிலைக்கு மிக முக்கிய இடமுண்டு. கறிவேப்பிலையை பலரும் வாசனைக்காகப் பயன்படுத்துவது என்று நினைத்துக் கொண்டு, தூர எறிந்துவிட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் கறிவேப்பிலையில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. இது வெறுமனே உடலைப் பேணுவதற்காக மட்டுமல்லாது, அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
அதிக நறுமணமும் சத்துக்களும் கொண்ட கறிவேப்பிலை எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று.
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன.
கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலையை நாம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டோமேயானால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படுவதோடு, ரத்தம் சுத்திகரிக்கப்பபடுகிறது.
இளநரையைப் போக்குவதற்கு கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.
பார்வைக் கோளாறுகள் நீங்கி, கண்கள் பிரகாசமாகத் தெரியும்.
தலைமுடியைக் கருமையாக்கும். வளர்ச்சியைத் தூண்டும்.
தொடர்ந்து ஒரு மாதம் வரை காலையும் மாலையும் கறிவேப்பிலையைச் சாப்பிட்ட வர, நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும்.
வெண்குஷ்டம், மூலம், தோல் வியாதிகளை போக்கக்கூடிய சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு.
கறிவேப்பிலை ஜூஸ்
ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து, சுத்தமாகக் கழுவி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துச் சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். அதோடு, சில பேரிச்சம்பழங்களையும் சேர்த்து ஊற வைத்து அருந்தலாம்.
கறிவேப்பிலை சாறை வெறுமனே குடிப்பதைக் காட்டிலும் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். டீ, காபிக்கு பதிலாக, காலையில் அருந்துவதற்கான மிகச் சிறந்த பானம் இது.


JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK