ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோ, வேன், கால் டாக்சி ஆகியவை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் வாகனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டத்தீ தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பலதரப்பினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 
 
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
 

 
 
 
 
 
 
