எங்கே தொட்டாலும் ஷாக்- ‘உதய’மாகும் நெருக்கடிஜெ. தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்த திட்டத்துக்கு, ஓ.பி.எஸ். தலைமையிலான தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்துள்ளது தமிழகம். மின்வாரியங்களின் மொத்தக் கடனில் 75% மாநில அரசு ஏற்கவேண்டும், மிச்சமுள்ள 25% கடனுக்கு மின்வாரியம் கடன்பத்திரங்களாக அறிவிக்கவேண்டும் போன்ற பேரிடிகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன.தமிழக மின்வாரியத்துக்கு ஏற்கெனவே 1 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இதில் இணைந்ததன்மூலம் இது கிட்டத்தட்ட 2 லட்சம் கோடியாகிவிடும். மாநில அரசின் நேரடிக் கடனையும் சேர்த்தால் இந்தத் தொகை 4 லட்சம் கோடியாகிவிடும். இதிலிருந்து தமிழகம் மீள்வது அசாத்தியம் என சுட்டிக்காட்டுகிறார்கள் சூட்சுமம் தெரிந்தவர்கள்.இத்திட்டத்தின்படி 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் மாற்றியமைக்கப்படும். அப்படிச் செய்தால் மக்கள் தலையில் சுமையேறும். அதைத் தவிர்க்கநினைத்தால் மாநில அரசு மின்வாரியத்துக்கு மான்யம் தரவேண்டும்- அதாவது மொத்த மின்கட்டண உயர்வையும் அரசே ஏற்கவேண்டும். திட்டத்தில் இணைவதால், இப்படி தொட்ட இடமெல்லாம் ஷாக் அடிக்கப்போகிறது தமிழகத்துக்கு.தமிழகத்திலோ புதிய நிதி ஆதாரம் இல்லை. அதனால் இலவசம் அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்கான தொகையில் கைவைக்கவேண்டியதாகிவிடும் என இக்கட்டை சுட்டிக்காட்டுகிறார்கள் நிதித்துறை அதிகாரிகள். பிற மாநிலங்களோடு சேர்ந்து இத்திட்டத்தை எதிர்க்கவேண்டிய தமிழகம், இத்திட்டத்துக்கு ஒப்புதலளித்தது ஏன் எனக் கேட்கிறார்கள் தமிழக அரசின் முடிவை விமர்சிப்பவர்கள்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||