அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கருத்து கூறாமல் ஒதுங்கியிருந்தார். இதனால் அதிமுகவில் இருந்து விலகப் போவதாக செய்தி வெளியானது. ஜெயலலிதா தனக்கு அளித்த இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து அவர் உறுதியாக அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார் என்று கூறப்பட்டது.
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தீவிர இலக்கிய பணியில் ஈடுபடப் போவதாகவும் பேட்டியளித்தார். அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சசிகலாவை தனக்கு தெரியாது என்றும் கூறினார். இந்த நிலையில் இன்று காலையில் போயஸ்தோட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார் நாஞ்சில் சம்பத். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தான் அதிமுகவில்தான் இன்னமும் தொடருவதாக கூறினார். சசிகலாவின் ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாகவும் கூறிய நாஞ்சில் சம்பத்,தமிழகத்தின் மாண்பை காப்பாற்ற அதிமுகவில் நீடிப்பதாக கூறினார்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||