t> கல்விச்சுடர் பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கியிருப்பது கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 January 2017

பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கியிருப்பது கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்

பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்று திமுக செயல் தலைவரான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கட்டாய விடுமுறையை இப்போது விருப்ப விடுமுறையாக மாற்றியுள்ளது. பொங்கல் திருநாள் என்பது தமிழகம் முழுவதும் சாதி-மத வேறுபாடுகள் கடந்து அனைவரும் கொண்டாடும் கலாச்சார விழாவாகும். இதற்கான விடுமுறையை, கட்டாய விடுமுறையிலிருந்து மத்திய அரசு நீக்குவது என்பது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியாக தெரியவில்லை என்பதை நினைக்கும் போது மிகவும் கவலை அளிக்கிறது

மத்திய அரசின் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்கள் பொங்கல் நாளினை பொதுவிடுமுறையாகக் கழிக்க முடியாமல், விருப்பமிருந்தால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என நிர்பந்திப்பது தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்படும் பண்பாட்டுத் தாக்குதலாகும்.

காஷ்மீர் முதல் தமிழகம் வரையிலான இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரின் தாய்மொழிகள் மீது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் நடவடிக்கையாலும், புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் மதவாதக் கொள்கைகளைப் புகுத்தும் முயற்சியாலும் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குறியாக்கும் விதத்தில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் உச்சகட்ட வெளிப்பாடாக, தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கான கட்டாய விடுமுறையை ரத்து செய்திருக்கிறது.

எனவே மத்திய அரசு உடனடியாக இந்த அறிவிப்பினைத் திரும்பப் பெறவேண்டும். கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் திருநாள் இடம்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.


JOIN KALVICHUDAR CHANNEL