ஜெ. மரணம் -
சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மனுவை கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் புகார் கடிதத்தை சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. மேலும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.