மத்தியப்பிரதேசத்தில் சீரியல் எண் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போபால்: மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஏடிஎம்ஒன்றில் சீரியல் எண் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவை கள்ள நோட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தமோ என்ற இடத்தில் ஏடிஎம் எந்திரத்தில் நாராயண் அகர்வால் என்ற பள்ளி ஆசிரியர் 1000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். அப்போது வந்த இரண்டு 500 ரூபாய் நோட்டுகளிலும் சீரியல் எண் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் இந்த சர்ச்சைக்குரிய 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. அதேபகுதியைச் சேர்ந்த சஞ்சய் அசாட்டி என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுத்த போதும் இதேபோல் சீரியல் எண் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன.
இவை கள்ள நோட்டுகளா அல்லது அச்சிடப்பட்டபோது ஏற்பட்ட தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. ஏடிஎம்மில் சீரியல் எண் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் இந்திய குழந்தைகள் வங்கி என்ற பெயரில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||