t> கல்விச்சுடர் நகங்களில் ஏற்படும் இதுபோன்ற மாற்றங்களால் உண்டாகும் விளைவுகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 February 2017

நகங்களில் ஏற்படும் இதுபோன்ற மாற்றங்களால் உண்டாகும் விளைவுகள்


நமது உடலினுள் ஏதேனும் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டால், அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நமது வெளிப்புற உடலில் அறிகுறிகளாக தென்பட ஆரம்பிக்கும்.
உதாரணமாக, தோல், நகம், மலம், சிறுநீர் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்டு, நமது உடலில் எந்த பாகத்தில் கோளாறு உண்டாகி இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

இதில், நகங்களில் உண்டாகும் மாற்றங்கள், தோற்றம், நிறம் மாறுதல், நகம் வலுவிழந்து போவது போன்றவற்றை வைத்து உங்கள் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அல்லது உடலில் எந்த எதிர்மறை தாக்கம் அதிகரித்து வருகிறது போன்றவற்றை கண்டறியலாம்.
* நகம் குவித்து காணப்படுவது! தொடர்ந்து வருடக்கணக்கில் நகம் சற்று மேடு போல குவிந்து காணப்படுவது, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதையும், நுரையீரல் நோய் உண்டாவதையும் வெளிபடுத்தும் அறிகுறிகள் ஆகும். மேலும், இது குடல், இதயம், கல்லீரல் போன்ற நோய்களுக்கான அறிகுறியாகவும் வெளிப்படுகிறது.
நகம் குழி போன்று காணப்படுவது! ஸ்பூன் குழி போல நகம் உள்வாங்கி காணப்படுவது, இரும்புச்சத்து குறைபாடு, இரத்தசோகை போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகின்றன. மேலும், இது இதய நோய்கள் மற்றும் தைராய்டு சுரப்பிக் குறைபாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
நிறம் வேறுபடுதல்! உங்கள் நகத்தில் பெரும்பாலும் வெள்ளையாகவும், நக நுனியில் மட்டும் பின்க் நிறத்தில் நேரோ (Narrow) போன்று வளைந்து காணப்படுவது, கல்லீரல் நோய், இதய செயற்திறன் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு போன்றவற்றின் அறிகுறியாகும்.
நகத்தில் பியூ வரிகள்! நகத்தின் குறுக்கே வரிகள் போன்று தோன்றுவது, நீரிழிவு, வாஸ்குலர் நோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, நிமோனியா மற்றும் ஜின்க் குறைபாடு போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது.
விரல் நகங்கள் வலுவிழந்து போவது, லூசாக இருப்பது, மங்கிய வெள்ளை / மஞ்சள் நிறத்தில் காணப்படுவது, தைராய்டு நோய் மற்றும் சொரியாசிஸ் போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகிறது. இது நகத்தை இறுக்கமின்றி, தசையில் இருந்து சற்று விலகி இருக்க செய்யும்.
மஞ்சள் நகங்கள்! சுவாச பிரச்சனைகள் அல்லது நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்தால் இந்த மஞ்சள் நக நோய் தென்படலாம்.
நகத்தில் சின்ன சின்ன குழிகள் / புள்ளிக்கள் போன்று காணப்படுவது, சொரியாசிஸ், சருமத்தில் செதில் போன்ற திட்டுகள், திசு சீர்குலைவுகள், முடி கொட்டுதல் போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL