t> கல்விச்சுடர் கூண்டு கிளிகளான எம்.எல்.ஏ.,க்கள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 February 2017

கூண்டு கிளிகளான எம்.எல்.ஏ.,க்கள்

சொகுசு பஸ்களில் அழைத்து செல்லப்பட்ட 127 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று(பிப்.,8) இரவு சென்னை புறநகரிலுள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பீதியில் சசி அணியினர்:
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று(புதன்கிழமை) நடந்தது. கூட்டத்துக்கு பின் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்ட 129 எம்.எல்.ஏ.,க்களில் இரண்டு பேர் தப்பிச் சென்று பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக 3 எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதனையடுத்து இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை தக்கவைப்பதற்காக அவர்களை எங்கும் செல்ல அனுமதிக்காமல் சசிகலா அணியின் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் இறங்கினர்.

கூண்டு கிளிகள்:
மீதமுள்ள 127 எம்.எல்.ஏ.,க்கள் 3 சொகுசு பஸ்களில் அழைத்து செல்லப்பட்டு
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள சொகுசு விடுதியில் நேற்று(பிப்.,8) இரவு தங்க வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது செல்போன் பேச்சுகளும் கண்காணிக்கப்படுகின்றன. தனக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கிடைக்கும் என பன்னீர் தெரிவித்துள்ளதால், பீதியில் உள்ள சசிகலா அணியினரால், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் கூண்டு கிளிகளாக அடைபட்டு கிடக்கின்றனர்.

JOIN KALVICHUDAR CHANNEL