பாசம் என்பது மனிதர்களுக்கு
மட்டுமேயானது அல்ல. பல விலங்குகள்
இந்த விஷயத்தில் நம்மை மிஞ்சியிருக்கின்றன. அப்படி
ஒரு நெகிழ்ச்சியான, சோகமான சம்பவம் ஒன்று
தமிழக எல்லையில் சமீபத்தில் நடந்திருக்கிறது. அந்த வீடியோ வைரல்
ஆக பரவி, அனைவரையும் கண்கலங்க
செய்திருக்கிறது.
தமிழ்நாடு -கர்நாடாகா நெடுஞ்சாலை ஒன்றில் நடந்திருக்கிறது இச்சம்பவம்.
சாலையைக் கடக்க முயன்ற குரங்கு
ஒன்றை, வேகமாக சென்று கொண்டிருந்த
கார் அடித்துவிட்டு சென்றுவிட்டது. சம்பவ இடத்திலே குரங்கு
இறந்துவிட்டது. இதைப் பார்த்த குட்டிக்
குரங்கு உடனே அம்மா குரங்கை
நோக்கி ஓடி வந்தது. இறந்து
கிடந்த அம்மாவின் காதில் எதோ கிசுகிசுத்தது.
எந்த அசைவும் இல்லாததால் பயப்படத்
தொடங்கியது. தாய்க்குரங்கின் மார்பின் மீது காது வைத்து
கேட்டது. பின், அம்மாவை கட்டிப்பிடித்துக்
கொண்டது குட்டி.
அங்கு கூடியிருந்தவர்கள் இந்தச்
சம்பவத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
பின், குட்டியை அம்மாவிடம் இருந்து விலக்கி, இறந்த
அந்தக் குரங்கை புதைத்திருக்கிறார்கள். அப்போதும் மரம்
விட்டு மரம் தாவி அம்மாவை
நோக்கியே ஓடி வந்துக் கொண்டிருந்தது
குட்டி.
குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே எமோஷன்ஸ் உண்டு.
இதற்காக பல ஆராய்ச்சிகளை பல
நாட்டு ஆராய்ச்சியாளர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் தேவையே
இல்லை என்பது போல சில
உண்மைச் சம்பவங்கள் நடக்கின்றன.
குரங்குகள் தனது குழந்தைகளை கவனித்துக்
கொள்வதில் பல விஷயங்கள் மனிதர்களை
போலவே நடந்து கொள்ளும். கைப்பிடித்து அழைத்துச் செல்வது, கட்டியணைத்து தூங்குவது என பெரும்பாலும் அவை
மனிதர்களை போலவே வாழும்.
கம்யுனிகேஷுக்கு உடல்மொழியை பயன்படுத்துவதில் குரங்குகள் எக்ஸ்பெர்ட். முகபாவனைகள், கை அசைவுகள், உடல்
அசைவுகள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு
அர்த்தம் உண்டு
செடிகள், பூச்சிகள் என எல்லா வித
உணவுகளையும் குரங்குகள் உட்கொள்ளும்.
குரங்குகள் வாழைப்பழத்தை சாப்பிடுவதை பார்த்திருக்கிறீர்களா? உரித்து தோலை தூக்கிப்
போட்டுவிட்டு பழத்தை மட்டுமே சாப்பிடும்.
குரங்குக்கும், மனித குரங்குக்கும்(Apes) என்ன வித்தியாசம் தெரியுமா? குரங்குக்கு மட்டுமே வால் இருக்கும்.
குரங்குக்கும், மனித குரங்குக்கும்(Apes) என்ன வித்தியாசம் தெரியுமா? குரங்குக்கு மட்டுமே வால் இருக்கும்.
குரங்குகள் தங்களை தொடுவதை ரசிக்காது.
தொடாமல் விளையாடினால் எந்த பிரச்னையயும் செய்யாது.
மனிதர்களுக்கு செய்யப்படும் ஐ.க்யூ தேர்வுகள்
விலங்குகளுக்கும் செய்யப்படுவதுண்டு. அதில் குரங்குதான் டாப்
ஸ்கோரர். 174
வீடியோ பார்க்க Click Here