இரட்டை இலையை பறிகொடுத்த தினகரனை தனது முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்று சசிகலா கூறிவிட்டாராம். தினகரனுக்கே இந்த நிலைமை என்றால் அசைன்மென்ட் கொடுக்கப்பட்ட தம்பிதுரைக்கு சொல்லவா வேண்டும்? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிடம் இருந்து ஆரம்பத்திலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். ஆனால் அந்த உத்தரவை கட்சியின் சீனியர்கள் எவரும் மதிக்கவில்லையாம். காரணம் டி.டி.வி.தினகரனுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கியது முதல் ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுவரை சீனியர்கள் எவருக்கும் உடன்பாடு இல்லையாம்.ஆனால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள சசி எது சொன்னாலும் முகத்துக்கு முன்பு ஓகே சொல்லி விட்டு வீடு திரும்பியதும் உள்ளடி வேலைகளை கச்சிதமாக செய்து வருகின்றனராம். இதனை புரிந்துகொள்ளாத தினகரன் தான் ஆர்.கே.நகரில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று சொல்லி வருகிறார் என்ற கலகக் குரலும் ஆங்காங்கே எழுகிறது. இந்நிலையில் கட்சியின் சின்னமான, இரட்டை இலையை பறிகொடுத்த தினகரனை தனது கண்களாலேயே எரித்துத்தள்ளிவிட்டாராம் சிறைக்கைதி சசிகலா. இரட்டை இலையைத்தான் பறிகொடுத்துவிட்டோம் அட்லீஸ்ட் இரட்டை மின் விளக்கு கம்பத்தை கோரிப் பெற்றிருந்தால், ‛இரட்டை, இரட்டை’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, இரட்டை இலையை ஞாபகப்படுத்துவது போல, தீவிர பிரசாரம் செய்திருக்க முடியும். எதற்கும் லாயக்கு இல்லாத உங்களை வெச்சுக்கிட்டு என்ன செய்யறது அப்ரசன்ட்டிகளா என்று சிறைக்கு வந்த சீனியர்களை கரித்துக்கொட்டி இருக்கிறார் சசி. வேடிக்கை பார்த்த தினகரனுக்கே இந்த நிலைமை என்றால், அசைன்மென்ட் கொடுக்கப்பட்ட தம்பிதுரையின் நிலை சொல்லித்தெரியவேண்டியதில்லை. அடிகொடுத்த கைப்புள்ளைக்கே இந்த நிலைமைனா…அடி வாங்குனவன் உயிரோட இருப்பனா?….
மைன்ட் வாய்ஸ்..!
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||