ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி மற்றும் பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்து உள்ளது. தற்போது ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போட்டி போட்டனர். இது குறித்த விவாதம் நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. மேலும் அதிமுக கட்சி பெயரையும் யாரும் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே எம்.ஜி.ஆர் மறைந்த நேரத்தில் இதே போன்று அதிமுக ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதேபோன்று தற்போதும் சேவல் மற்றும் இரட்டை புறா சின்னத்தை பன்னீர் செல்வம் மற்று சசிகலா அணியினர் கேட்டு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் தற்போது சேவல் மற்றும் இரட்டை புறா சின்னத்தை நீக்கி உள்ளது. ஏனென்றால் உயிருள்ள பொருட்களை சின்னமாக வைக்க தடை விதித்துள்ளது. உயிருள்ள பொருட்களை சின்னமாக வைத்தால், அதனை வைத்து சில விரும்ப தகாத விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் இரு தரப்புக்குமே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நீண்ட காலமாக உள்ள யானை போன்ற சின்னங்களுக்கு தேர்தல் ஆணைம் தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||