t> கல்விச்சுடர் பன்னீர் அணிக்கும் தி.மு.க.,வுக்கும் மட்டுமே போட்டி; உளவுத்துறை தகவல். தினகரன் அதிர்ச்சி... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 March 2017

பன்னீர் அணிக்கும் தி.மு.க.,வுக்கும் மட்டுமே போட்டி; உளவுத்துறை தகவல். தினகரன் அதிர்ச்சி...



சென்னை: நடக்க இருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பன்னீர் அணிக்கும் தி.மு.க.,வுக்கும் இடையே மட்டும் தான் கடும் போட்டி இருக்கும் என உளவுத்துறை தகவல் அளித்து உள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிச.,5ம் தேதி காலமானதை தொடர்ந்து. அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே., நகரில் வரும் ஏப்.12ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*வேட்பாளர்கள் யார் யார்:

இத்தொகுதியில் சசிகலா தரப்பில் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி சார்பாக அக்கட்சியின் அவைத் தலைவராக உள்ள மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருது கணேஷ், ஜெ. அண்ணன் மகள் தீபா, மற்றும் பா.ஜ., அணி சார்பாக இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் வேட்பாளராக களமிறங்க உள்ளனர்.

*உளவுத்துறை தகவல்

இந்நிலையில் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர் செல்வம் அணிக்கும் , தி.மு.க., கட்சிக்கும் இடையே மட்டும் கடும் போட்டி நிலவும் என்று தொகுதி நிலவரத்தை ஆய்வு செய்த உளவுத்துறை தகவல் அளித்துள்ளது

*கடும் அதிர்ச்சி:

உளவுத் துறையின் இந்த தகவலால் முதல்வர் கனவில் மிதந்து வரும் தினகரன் மற்றும் சசி தரப்பினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


JOIN KALVICHUDAR CHANNEL