t> கல்விச்சுடர் பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்துவது எப்படி: பெற்றோர் குழப்பம் அடைய தேவையில்லை. பள்ளிக்கல்வி அரசு தேர்வுத்துறை அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 May 2017

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்துவது எப்படி: பெற்றோர் குழப்பம் அடைய தேவையில்லை. பள்ளிக்கல்வி அரசு தேர்வுத்துறை அறிவிப்பு





பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில், தமிழ் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன; அதை, திருத்தி தர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 12ல் வெளியானது.

இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், குறிப்பிட்ட மாணவர்களை படம் பிடித்தல், வாழ்த்து தெரிவித்தல் போன்ற, சம்பிரதாய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு, மதிப்பெண் சான்றிதழில் மாணவர் மற்றும் பள்ளியின் பெயர், தமிழில் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மே, 15ல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக சான்றிதழ் வெளியானது. அதில், அறிவித்தபடி, பெயர் விபரங்கள் தமிழில் இடம் பெற்றன. நேற்று முன்தினம் முதல், பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், பள்ளி மாற்று சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், பல மாணவர்களுக்கு, தமிழ் எழுத்துக்களில் பிழைகள் இருந்தன.


இது குறித்து, பெற்றோர் களும், பள்ளிகளும் கூறியதாவது:பிழைகள் கொண்ட, இந்த சான்றிதழ்களை வைத்து, உயர் கல்வியில் சேர்வதில் பிரச்னை ஏற்படும். எதிர்காலத்தில், மற்ற ஆவணங்களை பதிவு செய்வதிலும் குழப்பம் ஏற்படும். எனவே, தற்காலிக சான்றிதழில் பிழைகள் உள்ளோரிடம் மனுக்களை பெற்று, அசல் சான்றிதழ்களில், பிழைகளை திருத்த, தேர்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.


இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அரசுத்தேர்வுகள் இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் வரும் 22.05.2017 முதல் 05.06.2017 வரை மாணவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவே பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


JOIN KALVICHUDAR CHANNEL