t> கல்விச்சுடர் நாளை தொடங்கும் ஆசிரியர் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடைபெற வேண்டும் - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 May 2017

நாளை தொடங்கும் ஆசிரியர் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடைபெற வேண்டும் - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!




தமிழகம் முழுவதும் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நாளை (19ம் தேதி) தொடங்குகிறது. 31ம் தேதி வரை ஆசிரியர் கலந்தாய்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறையின் மூலமும், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமும் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு நாளை (19ம் தேதி) தொடங்குகிறது.


பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடத்தப்படும் கலந்தாய்வு விவரம் வருமாறு:


19.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.


20.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.


22.05.2017 - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.


24.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்.


25.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.


27.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு.


28.05.2017 - உடற்கல்வி, கலை, இசை, தையல், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.


29.05.2017 - பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்.


30.05.2017 - பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.


31.05.2017 - இடைநிலை, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு.


இதேபோல தொடக்க கல்வித் துறையின் சார்பிலும் கலந்தாய்வு நாளை (19ம் தேதி) தொடங்கி 30ம் தேதி வரை நடத்தப்படுகிறது. கலந்தாய்வு குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் கலந்தாய்வில் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் மறைக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.


இதனால் ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதும் கலந்தாய்வின் போது பணியிடங்கள் காலியில்லை எனக் கூறி திரும்பிச் செல்வதும் தொடர்கிறது. பணியிட மாறுதல் கலந்தாய்வு என்பது கண் துடைப்பாகவே மாறி வருகிறது. தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செயலாளர், இயக்குநர் ஆகியோர் மாறியுள்ள நிலையில் இந்த ஆண்டாவது ஒளிவுமறைவற்ற முறையில் நேர்மையான கலந்தாய்வு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றனர்.

JOIN KALVICHUDAR CHANNEL