திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த முடியவில்லை என்ற வருத்ததை போக்க விஷ் தலைவர் என்ற இணையபக்கத்தில் வாழ்த்துகளை தெரிவிக்கும் வசதியை திமுக அறிமுகம் செய்துள்ளது.
ஒரு சொல்லில் பல அர்த்தம் காணும் கம்பீரப் பேச்சுக்கு சொந்தக்காரரான திமுக தலைவர் கருணாநிதி தனது 94வது பிறந்தநாளை ஜூன் 3ம் தேதி கொண்டாடுகிறார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரை தொண்டர்கள் நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று திமுக கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் ஏமாற்றத்தில் உள்ள தொண்டர்கள் தங்கள் தலைவருக்கான வாழ்த்தை இணையதளம் வாயிலாக தெரிவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது திமுக.wishthalaivar.com என்ற இணையபக்கத்தை உருவாக்கி அதன் மூலம் வாழ்த்து தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த இணையதளத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஸ்டாலின் தனது முதல் வாழ்த்துச் செய்தியினை பதிவு செய்தார்.
மேலும் சட்டப்பேரவையின் வைரவிழா நாயகர் தலைவர் கருணாநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காட்சிப் பதிவுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோர் கடந்த 2016ம் ஆண்டில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் அனைவரும் பார்த்து ரசிப்பதற்காக இணையபக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.