t> கல்விச்சுடர் 1,712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 June 2017

1,712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் 1,712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 1,663 பணியிடங்களுடன் மொத்தம் 3,375 இடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும். தேர்வர்கள் தங்களுடன் கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆளறிச்சான்றிதழ் (ஐடெண்டி கார்டு) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேறு எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.


JOIN KALVICHUDAR CHANNEL