ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் /உடற்கல்வி இயக்குனர் நிலை - i பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் /உடற்கல்வி இயக்குனர் நிலை - ஐ பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை எதிர்வரும் 02.07.2017 அன்று நடத்த உள்ளது. இத்தேர்வு எழுத 2,18,591 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.
விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (hall ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in/) பதிவிக்கம் செய்து கொள்ளாலாம். 16.06.2017 காலை 10.00 மணி முதல் தேர்வர்கள் அவர்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||