t> கல்விச்சுடர் நாடு முழுக்க தீபாவளி உற்சாக கொண்டாட்டம்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 October 2017

நாடு முழுக்க தீபாவளி உற்சாக கொண்டாட்டம்!



தமிழகம் உட்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்தோடு நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. இம்முறை பருவமழை அதிகம் பெய்து ஏரி, வாய்க்கால்களில் நீர் பெருக்கெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த வருடத்தை விட இவ்வாண்டு உற்சாகமாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

புதுமணத் தம்பதிகள் தங்களது தலை தீபாவளியை குடும்பதினரோடு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையொட்டி பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் செல்வார்கள் என்பதால் காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL