t> கல்விச்சுடர் மின்னணு வடிவில் ஆதார் அட்டை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 April 2018

மின்னணு வடிவில் ஆதார் அட்டை



முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டையை ‘இ – -ஆதார்’ எனும் மின்னணு வடிவிலும் பயன்படுத்தலாம். இ – -ஆதார் மின்னணு வடிவ அட்டையை இதன் அதிகார பூர்வ இணையதளம் மூலம் டவுண்லோடு செய்யலாம்.

பெயர், முகவரி, 12 இலக்க எண் உள்ளிட்ட­வற்றை கொண்ட ஆதார் அட்டை, முக்கிய அடையாள ஆவணமாக திகழ்கிறது.

பல சேவைகளை பெற ஆதார் அட்டை அவசிய­மாகிறது.எனினும், சில நேரங்களில் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை மறந்து வைத்துவிடலாம்.

இது போன்ற நேரங்­களில், மின்னணு வடிவிலான இ – -ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.இந்த மின்­னணு வடிவிலும் பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் 12 இலக்க எண் இடம் பெற்றிருக்கும்.

இவற்றுடன் இதை டவுண்லோடு செய்த நாள் மற்றும் ஆதார் எண் உருவாக்கப்பட்ட நாள் ஆகிய விபரம் இடம் பெற்றிருக்கும்.

இந்த மின்னணு வடிவ ஆதார் அட்டை­யையும், தேவையான இடங்களில் அடை­யாள ஆவணமாக பயன்படுத்தலாம். இ – -ஆதார் அட்டையை, யூ.ஐ.எ.டி.ஐ., அமைப்பின் இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

யூ.ஐ.எ.டி.ஐ., இணைய தளத்தில் (eaadhaar.uidai. gov.in/) இதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆதார் எண், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை சமர்­பிக்க வேண்டும். இதன் பிறகு பதிவு செய்த மொபைலுக்கு ஒருமுறை பாஸ்­வேர்டு வரும். அதை உள்ளீடு செய்து இ- – ஆதார் ஆவணத்தை பெறலாம்.


JOIN KALVICHUDAR CHANNEL