t> கல்விச்சுடர் ஆதார் தகவலை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 April 2018

ஆதார் தகவலை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி



ஆதார் அட்டை வழங்குவதற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அண்மையில், பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், முகநூலைப் (ஃபேஸ்புக்) பயன்படுத்தியவர்களின் தகவல்களை முறைகேடாகப் பெற்று பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதார் அட்டை வழங்கும் திட்டம் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனிநபர் உரிமைகளுக்கு எதிரானதா? என்பது குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தைச் சுட்டிக்காட்டி ஆதாருக்காக பெறப்படும் தகவல்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) மற்றும் குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி கூறியதாவது:
கேம்பிரிட்ஜ் அனல்டிகா பிரச்னையுடன் ஆதாரை ஒப்பிட வேண்டாம். ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்களைப் போல ஆதார் அமைப்பு, தனிநபர்கள் தங்களிடம் அளிக்கும் விவரங்கள் எதையும் ஆராய்வதும் இல்லை, பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதும் இல்லை. மேலும், ஆதார் சட்டத்தின்படி பொதுமக்களிடம் இருந்து பெறும் தகவல்களை ஆய்வு செய்யவும் முடியாது. ஒரு நபரிடம் இருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த நபரின் அடையாளம் மட்டுமே உறுதி செய்யப்படுகிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர் அந்த நபர்தானா? இல்லை வேறு நபரா? என்று அடையாளம் காணமட்டுமே ஆதாரின் போது பெரும் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
இதையடுத்து, அரசுப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாது பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஆதார் தகவல்களை பயன்படுத்த அனுமதிப்பது ஏன்? என்று நீதிபதிகள் அடுத்த கேள்வியை எழுப்பினர். இதற்கு 'டீ விற்பவர்கள், வடை விற்பவர்களுக்கெல்லாம் ஆதார் தகவல்களை உறுதிப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படுவதில்லை. சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற சில நிறுவனங்கள் மட்டுமே ஆதார் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையிலும் முதலீடு செய்துள்ளன. சில நேரங்களில் தனியார் நிறுவனங்கள் அரசு சார்ந்த பொது விஷயங்களில் பணியாற்ற நீதிமன்றமே அனுமதி அளித்துள்ளது.
ஒரு காலத்தில் ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர், தனது நாட்டு மக்களை யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்று தனித்தனியாக அடையாளம் காண அட்டை வழங்கினார். ஆனால் ஆதார் அட்டைக்காக மதம், ஜாதி, மொழி, இனம் என்ற எந்த விவரத்தையும் நாம் கோரவில்லை. எனவே, ஆதாருக்கு எதிராக தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம்' என்று ராகேஷ் பதிலளித்தார்.
 


JOIN KALVICHUDAR CHANNEL