
மத்திய அரசு, தற்போதுள்ள பல்கலைக்கழகமானியக் குழுவைக் கலைத்து விட்டு இந்தியஉயர்கல்வி ஆணையம்அமைக்கவிருப்பதும், ஆசிரியர் தகுதித்தேர்வையடுத்து தமிழக அரசு புதிய போட்டித்தேர்வை அறிவித்திருப்பதும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் மட்டுமல்லாதுகல்வியாளர்களையும் கலக்கத்தில்ஆழ்த்தியுள்ளன.சுய சிந்தனையைவளர்ப்பதே உயர்கல்வியின் நோக்கம் என்றகொள்கையோடு உருவாக்கப்பட்டதுபல்கலைக்கழகக் கல்வி வாரியம். இதற்குக்காரணமானவர் தத்துவப் பேராசிரியராகவாழ்வைத் தொடங்கி குடியரசுத் தலைவராகஉயர்ந்த டாக்டர் சர்வபள்ளிஇராதாகிருஷ்ணன். அவர் தலைமையில்1948-இல் உருவாக்கப்பட்டதுஇது."அனைவருக்கும் தரமான உயர்கல்வி'என்ற இலக்கோடு 1956-இல் உருவானபல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)சட்டபூர்வ அமைப்பு. மாணவர் கல்வி உதவித்தொகை திட்டத்தை முன் வைத்த சி.டி.தேஷ்முக் மற்றும் மகளிர்பல்கலைக்கழகங்களை நிறுவ திட்டங்கள்தீட்டிய மாதுரிஷா ஆகிய இருவரும் ஒருரூபாய் மாத ஊதியத்துக்கு இதன்தலைவர்களாகப் பணியாற்றினர். இவ்வாறுகல்வியாளர்களாலும், தொலைநோக்குப்பார்வையாளர்களாலும் உருவாக்கப்பட்டஒரு கல்விக் கழகம் இப்போதுகலைக்கவிருப்பது வருத்தத்தைஅளிக்கிறது.
இப்போது இருக்கும் பல்கலைக்கழகமானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்தியஉயர்கல்வி ஆணையம் என்ற புதியஅமைப்பு வரவிருக்கிறது. இதனால்பல்கலைக்கழகங்களுக்கும்,கல்லூரிகளுக்கும் தொடர்பேஇல்லாதவர்கள், இனி அனைத்து உயர்கல்விநிறுவனங்களின் திட்டத்தை மதிப்பிட்டுமானியம் வழங்கலாம்.
உயர்கல்வியின் எதிர்காலத்தைக்கேள்விக்குள்ளாக்கவிருக்கும் இந்தநடவடிக்கையின் முன்னோட்டம் 2018 ஜூன்28 அன்று மனித வள மேம்பாட்டுத் துறைஅமைச்சகத்தின் இணையதளத்தில்ஆங்கில மொழியில் மட்டும்வெளியிடப்பட்டது. வேறு எந்த இந்தியமொழியிலும்வெளியிடப்படவில்லை.கருத்து கேட்கும்முன்வரைவாகவே அதுமுன்வைக்கப்பட்டாலும் குறுகிய காலஅவகாசமே கருத்து கேட்புக்குத் தரப்பட்டது.அதிலும் மசோதா என்பதற்குப் பதிலாகசட்டம் என்ற பதத்துடன் "இந்திய உயர்கல்விஆணையம் சட்டம் 2018' முன் வரைவாகஅறிவிக்கப்பட்டது.
ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்குமுன்பாக நாடாளுமன்றத்தில் அதற்கானமசோதா தாக்கல் செய்யப்படும். அதற்குகுடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தபிறகுதான் சட்டமாக மாறும். அதுவரை அதுவரைவு மசோதா என்றே அழைக்கப்படும்.ஆனால் இந்த ஆவணம் "முன் வரைவுச்சட்டம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதுவியப்பளிக்கிறது.
கல்வி என்பது மத்தியப் பட்டியலிலும்,மாநிலப் பட்டியலிலும் இடம்பெற்றிருப்பதால் இந்த வரைவு மசோதாமாநில உரிமையை மீறும் விதமாகஅமைக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச்சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானதாகும்என்று மாநிலங்கள் எதிர்க்கின்றன.
அத்துடன் இந்த வரைவு மசோதா பிரிவு 3துணைப்பிரிவு (6)-இன்படி உயர்கல்விஆணையத்தின் தலைவர் பதவிக்குவெளிநாட்டு குடிமக்களில் ஒருவரைநியமிப்பதற்கு வழி செய்கிறது.
'
"பல்கலைக்கழக மானியக் குழு' என்னும்அறுபதாண்டு கால சட்டபூர்வ அமைப்பு,அனைத்து அரசுக் கல்விநிறுவனங்களுக்கும், அரசு உதவி பெறும்கல்வி நிறுவனங்களுக்கும் போதுமான நிதிகிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காகஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் கல்வி ஒருசமூகப் பொருளாகஉறுதிப்படுத்தப்படுகிறது. இந்தஅமைப்பைக் கலைப்பதற்கு இவ்வளவுஅவசரம் ஏன்?
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசும் பல்கலைக்கழக மானியக் குழுவைஒழித்துக்கட்ட திட்டமிட்டிருந்தது.அப்போதைய மனிதவள மேம்பாட்டுஅமைச்சர் கபில்சிபல், யுஜிசி செயல்படாஅமைப்பாக உள்ளது என்றும் மாற்றுஅமைப்பை உருவாக்குவது பற்றியும்பேசியுள்ளார்.
யுஜிசி செயல்படா அமைப்பாக இருப்பதற்குயார் காரணம்? அதனை செயல்பட வைக்கும்பொறுப்பு அரசுக்கு இல்லையா? இந்தக்கேள்விகள் பரவலாக எழுந்ததும்அப்போதைய அரசு அடங்கிப் போனது.
தமிழக அரசின் கல்வித்துறை, நீண்டகாலத்திற்குப் பிறகு பெரும் மாறுதல்களைச்செய்து மக்கள் மத்தியிலும், மாணவர்மற்றும் பெற்றோர் மத்தியிலும் புதியநம்பிக்கைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
பள்ளி ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதித்தேர்வு வந்தபோதே அதைக்கல்வியாளர்களும், ஆசிரியர்இயக்கங்களும் எதிர்த்தனர். பள்ளி,கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு ஆசிரியர்பணிக்கான பயிற்சியும், பட்டயமும் பெற்றநிலையில், இந்தத் தேர்வு தேவைதானாஎன்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இப்போது தமிழக அரசின்ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று இரண்டாவதுதேர்வையும் அறிவித்திருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போலஇருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆசிரியப் பயிற்சிப் பட்டம்பெற்றவர்களும், கல்வித் துறையில் பட்டம்பெற்றவர்களும் வேலை வாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்து, அந்தவரிசையின் அடிப்படையில் பணிஇடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதேஇதுவரை இருந்து வந்த நடைமுறை.
இந்த நிலை மாற்றப்பட்டு அவ்வப்போதுஉருவாகும் காலிப் பணியிடங்களுக்குநேரடியாகவே போட்டித் தேர்வை நடத்தி,தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும்வகையில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வுஅறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அந்தத்தகுதித் தேர்வும் போதாமல், இன்னொருதேர்வும் நடத்தப் போவதாகத் தமிழக அரசுகூறுவது ஏன்?
வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம்தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லைஎன்றும், அப்படி கிடைப்பவர்கள் காலம்கடந்து வேலைக்கு வருவதால் படித்ததைமறந்து விட்டிருக்கிறார்கள் என்றும்சொல்லப்பட்டது.இப்போது படிப்பைமுடித்துவிட்டு வருபவர்கள் உடனடியாகத்தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெறும்வாய்ப்பு இருக்கும்போது அவர்களுக்குப்பாடங்கள் மறந்து போகவும் வாய்ப்பில்லை.அப்படியிருந்தும் தகுதித் தேர்வு, போட்டித்தேர்வு என்று இரண்டு தேர்வுகள் நடத்தவேண்டிய அவசியம் என்ன?
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவேண்டிய அரசுகள் தங்கள் கடமைகளில்இருந்து நழுவுகின்றன. இது மாணவரிடம்அவநம்பிக்கையையும், ஊழலையும்வளர்க்கவே உதவும். ஆசிரியர்தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்திடவேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு, உரியகாலத்தில் நடத்தாமல் தள்ளிப் போய்க்கொண்டே யிருக்கிறது. கடந்த முறை நடந்ததகுதித் தேர்வு பற்றிய ஊழல் புகாரும்இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 200 பேருக்கு அதிக மதிப்பெண்அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற வைத்திருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வைஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 7லட்சத்து 53 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதினர்.அவர்களில் 34,979 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அத்தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்டஅரசுப் பாலிடெக்னிக் விரிவுரையாளர்தேர்வில், மதிப்பெண்ணில் முறைகேடுநடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம்அத்தேர்வை ரத்து செய்தது. பாலிடெக்னிக்விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள்களை"ஸ்கேன்' செய்த அதே நிறுவனம்தான் கடந்தஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வுவிடைத்தாள்களையும் "ஸ்கேன்'செய்திருந்தது. விரிவுரையாளர் தேர்வைப்போலவே தகுதித் தேர்விலும் மதிப்பெண்குளறுபடி செய்யப்பட்டு இருப்பதாகஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஏராளமானபுகார்கள் வந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, புதியநிறுவனத்தின் மூலம் தகுதித் தேர்வுவிடைத்தாள்கள் "ஸ்கேன்' செய்யப்பட்டன.அப்போது சுமார் 200 பேருக்கு அதிகமதிப்பெண் அளிக்கப்பட்டு தேர்ச்சி பெறச்செய்திருப்பது தெரிய வந்தது.
அந்த 200 பேரின் விடைத்தாள்களுக்குப்பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறுவிடைத் தாள்களை கணினியில் உள்ளீடுசெய்து அதிக மதிப்பெண் வழங்கப்பட்டதைஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள்கண்டுபிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த 200 தேர்வர்கள்மீது காவல்துறையில் புகார்செய்யப்பட்டதுடன் அவர்கள் இதரதேர்வுகளை எழுதவும் ஆசிரியர் தேர்வுவாரியம் தடைவிதித்து நடவடிக்கைஎடுத்துள்ளது. இவ்வாறு நடத்தப்படும்போட்டித் தேர்வுகளில் ஊழல் நடப்பது இதுமுதன்முறையல்ல. காலம் அவற்றை மறந்துவிடுகிறது. அரசுத் துறைகளும் அவற்றைமறைத்து விடுகின்றன. ஆனால் ஊழல்மட்டும் தொடர்ந்து கொண்டுதான்இருக்கிறது.
பெயரளவுக்கு "தகுதி தேர்வு' என்றும், "போட்டித் தேர்வு' என்றும் கூறப்படுகிறதேதவிர, உண்மையானவர்களுக்குச் சென்றுசேரவில்லை. பணம் படைத்தவர்கள்பாதியில் தட்டிப் பறித்துக் கொள்ளவழிவகுக்கிறது. இது அரசுக்கும்,தொடர்புடைய துறைகளுக்கும் தெரியாதா?நன்கு தெரியும். தெரிந்துதான் எல்லாம்நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
மாற்றங்கள் மட்டுமே மாறாதவை என்பதுஇயற்கை விதி. அந்த மாற்றங்கள்ஏற்றங்களுக்குத் துணைபோக வேண்டுமேதவிர ஏமாற்றங்களுக்குத் துணை போகக்கூடாது
Source:தினமணி..
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||